Advertisment

பெகாசஸ்  விவகாரம்: விசாரணையில் இறங்கியது பிரான்ஸ்!

pegasus

Advertisment

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரதுதொலைபேசிகள்பெகாசஸ் உளவு மென்பொருளால்ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில்இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும்,பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. இந்தநிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாடு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மொராக்கோ உளவுத்துறை, பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையாளர்களைப் பெகாசஸ் மூலம் உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மீடியாபார்ட்என்ற ஊடகம் புகராளித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. தங்கள் நிறுவனரும்தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் பெகாசஸைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக மீடியாபார்ட்கூறியுள்ளது.

france Pegasus Spyware pegasus report
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe