மூதாட்டி ஒருவர் அவரது வீட்டின் சமையலறையில் இருந்த ஓவியம் ஒன்றின் மூலம் ஒரேநாளில் ரூ.47 கோடிக்கு அதிபதியாகியுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

france old woman become a overnight millionaire

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான காம்பிக்னே நகரை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர் தனது பழைய வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்த அவர், ஏல நிறுவனம் ஒன்றை அணுகியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அவரது வீட்டை ஆய்வு செய்ய வந்துள்ளனர். வீட்டில் இருந்த அலங்கார பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மூதாட்டியின் சமையலறையில் இருந்து ஓவியம் ஒன்றை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அது பற்றி மூதாட்டியிடம் கேட்டபோது, அந்த ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்றும், வீட்டில் வேறு இடம் இல்லாததால் அதனை சமையலறையில் தொங்க விட்டதாகவும் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிய ஓவியம் என்றும், அதன் மதிப்பு இன்றைய நிலையில், 6 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி) இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனை கேட்டு மகிழ்ச்சியில் உறைந்த அந்த மூதாட்டி, உடனே அந்த ஓவியத்தை ஏலத்தில் விடவும் ஏற்பாடுகள் செய்துள்ளார். சமையலறையில் இருந்த ஒரு பழைய ஓவியம் மூலம் 90 வயது மூதாட்டி ஒருவர் கோடீஸ்வரர் ஆனது பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.