
இந்தியா மட்டுமில்லாமல்உலகம் முழுவதும் தற்போது கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும்கரோனாதீவிரமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே கரோனாவின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட அந்த நாட்டில், தற்போது மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனையடுத்துபிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும், கடந்த 19 ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு இலகுவான கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனாபரவல் மேலும் அதிகரித்து வருவதால், இலகுவான கட்டுப்பாடுகளைக் கொண்ட இந்த ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த பிரான்ஸ் அதிபர்இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கில், மூன்றுவாரகாலத்திற்குப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை மக்கள், தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யலாம். அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)