Advertisment

ஒரு மாத ஊரடங்கை அமல்படுத்திய நாடு!

paris lockdown

Advertisment

இந்தியா மட்டுமில்லாமல்உலகம் முழுவதும் தற்போது கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும்கரோனாதீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே கரோனாவின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட அந்த நாட்டில், தற்போது மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், கரோனாபரவல் அதிகரிப்பால், பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத ஊரடங்கு, இன்று (19.03.2021) முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்த ஊரடங்கில், முந்தைய ஊரடங்கைக் காட்டிலும் இலகுவான கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யலாம். பள்ளிகள், பல்கலைக்கழங்கள் திறந்திருக்கும். மேலும் அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus france lockdown paris
இதையும் படியுங்கள்
Subscribe