Skip to main content

அணில் அம்பானிக்கு 1125 கோடி வரி தள்ளுபடி..! ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிறகு நடந்த ஒப்பந்தம்...

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

பிரான்ஸ் நாட்டில் அணில் அம்பானி பதிவு செய்திருந்த நிறுவனத்திற்கு சுமார் 1125 கோடி ரூபாய் அளவுள்ள வரியை தள்ளுபடி செய்வதாக ரஃபேல் ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்தில் அந்நாட்டு அரசு அறிவித்ததாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

france government waives 1125 crore tax to anil ambani company after rafale deal

 

பிரான்ஸில் அணில் அம்பானிக்கு சொந்தமான "ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2007 முதல் 2010 முதல் 60 மில்லியன் யூரோ வரியாக கட்ட வேண்டும் என பிரான்ஸ் அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 2010 முதல் 2012 ஆம் ஆண்டுகளில் 91 மில்லியன் யூரோ வரி விதிக்கப்பட்டது. 

மொத்தமாக 2014 வரை இந்திய மதிப்பில் சுமார் 1182 கோடி ரூபாய் அணில் அம்பானி பிரான்ஸ் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்திருக்கிறது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின் ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தில் அணில் அம்பானி இணைந்த பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருந்த 1182 கோடிரூபாய் வரியில் சுமார் 1125 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக, பிரான்ஸ்  அரசு அறிவித்ததாக ஊடகங்களில் வெளியான அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடனில் சிக்கி திவால் என அறிவிக்கப்பட்டது. மேலும் விமான உற்பத்தியில் முன் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது சர்ச்சை ஆனது. இந்நிலையில் ரஃபேல் விமான பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதத்திற்குள் அணில் அம்பானியின் 1125 கோடி ரூபாய் அளவு வரி தள்ளுபடி செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடத்தல் புகார்; தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியா வந்தது!

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Landed plane arrived in India from france

300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு எடுத்து நிகரகுவா என்ற நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, துபாயில் இருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் எரி பொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.

பெரும்பாலான இந்தியர்கள் பயணித்த அந்த விமானத்தில், ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், அந்த விமானம் நிகரகுவா நாட்டுக்கு புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது. 

மேலும், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இது மட்டுமின்றி விமானத்தில்  பயணம் செய்த பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியின. இதையடுத்து, அந்த விமானத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்து, பயணிகள் அனைவரையும் விமான நிலைய கட்டடத்தில் தங்கவைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் விமான பயணிகள் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் இல்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, 4 நாள் விசாரணைக்கு பின் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று (26-12-23) காலை இந்தியா வந்தடைந்தது.