Advertisment

பிரான்ஸ் நாட்டில் கரோனா ஐந்தாவது அலை தொடக்கம்!

france

உலகை அச்சுறுத்திவரும் கரோனாபரவல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைந்துவருகிறது. ஆனால் சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கரோனாபரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டிலும்தினசரி கரோனாபாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

அந்தநாட்டில்நேற்று (10.11.2021), தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கரோனாதொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று மட்டும் அந்த நாட்டில்11,883 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது. இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டில் கரோனா ஐந்தாவது அலையின் தொடக்கத்தை உணர்வதாகபிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர், "சில அண்டை நாடுகள் ஏற்கனவே கரோனாவின் ஐந்தாவது அலையை சந்தித்துவருகின்றன. பிரான்ஸ் நாட்டில் நாங்கள்எதை உணர்கிறோமோ, அது ஐந்தாவது அலையின் தொடக்கமாகஇருக்கலாம் என தெளிவாகத் தெரிகிறது." என கூறியுள்ளார்.

pandemic france
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe