Advertisment

தேவாலயத்தில் கொடூர கத்திக்குத்துத் தாக்குதல்.... மூன்று பேர் பலி...

france church incident

Advertisment

தேவாலயத்தில் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது நடத்திய சரமாரி கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ளது.

பிரான்ஸில் உள்ள நைஸ் நகரின் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்துகொண்டிருந்த போது கத்தியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில், 45 வயது மதிக்கத்தக்க வின்சென்ட் லோக்ஸ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார். மேலும், பெண் உட்பட இரண்டு பேர் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், போலீஸார் தேவாலய பகுதிக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அந்த நபர் ஒத்துழைக்காததால், அவரை சுட்டுப் பிடித்தனர். பிறகு நடைபெற்ற விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் 21 வயது மதிக்கத்தக்க வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவைச் சேர்ந்த பிரஹிம் அவுசவுய் என்ற நபர் எனத் தெரியவந்துள்ளது.

france
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe