Advertisment

“அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது” - சென்னை குறித்து வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

former pakistan cricketer vaasim akram talks about chennai issue 

Advertisment

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்இடது கைவேகப்பந்துவீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் எழுதியுள்ள சுயசரிதை புத்தகமான'சுல்தான்: எ மேமோயர்' என்ற புத்தகத்தில் தனது வாழ்வின் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், மறக்க முடியாத சம்பவங்களையும் எழுதிஉள்ளார்.

அந்த வகையில், "கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில்இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்ட போதுஎனதுமனைவி திடீரென சுயநினைவைஇழந்து மயக்கமுற்றார். எனக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நான் அழுதுவிட்டேன். மேலும்,எங்களிடம் இந்தியாவிற்கான விசாவும் இல்லை. இருப்பினும்,விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் என்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். மேலும், விசா தொடர்பான விஷயங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று என்று கூறினர். அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான இவரின்பதிவுகள் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

flight singapore Chennai cricketer Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe