Advertisment

இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒலித்த குரல்; முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேசம்!

Former cricketer Danish Kaneria support India for pahalgam incident

Advertisment

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முக்கிய நீர் ஆதாரமாகப் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரைத் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள்டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் பக்கத்தில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் உள்ளன? ஆழமாகப் பார்த்தால், உங்களுக்கு உண்மை தெரியும். நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. இது அவமானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

cricket jammu and kashmir Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe