Former Australian captain Ricky Ponting hospitalized

Advertisment

ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடக்கிறது.

இப்போட்டியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார். போட்டியின் நடுவே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தனக்கு நெஞ்சு வலிப்பதை சக வர்ணனையாளர்களிடம் கூற அவர்கள் ரிக்கி பாண்டிங்கை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

47 வயதான ரிக்கி பாண்டிங் 2002 முதல் ஒருநாள் கிரிக்கெட் அணியையும் 204 முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியையும் வழி நடத்திச் சென்றுள்ளார். இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007 உலகக் கோப்பையினை வென்றது.

Advertisment

இதுவரை 3 வகையான போட்டிகளையும்சேர்த்து 27,483 ரன்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.