Foreign Indians struggle in support of farmers ..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ளமூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, இந்தியா முழுக்க விவசாயிகள் மட்டுமின்றிதொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலதரப்பிலும்போராட்டங்கள் நடந்துவருகிறது.

Advertisment

விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்போம் என மத்திய அமைச்சர்கள் கூறினாலும், இந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை என விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியா முழுக்க நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு வெளிநாடுகளிலும் ஆதரவு பெருகிவருகிறது. பல நாடுகளின் அரசியல்வாதிகள், விவசாயிகளின் போராட்டத்தில் நியாயம் உள்ளது என வெளிப்படையான கருத்துகளைக் கூறி வருகிறார்கள். அதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் லண்டன் போன்ற வெளிநாட்டில்வாழும் இந்தியர்கள், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்துவருகிறார்கள்.

Advertisment

Foreign Indians struggle in support of farmers ..!

இந்தியாவின் ஜனநாயகத்தை கொல்பவர் மோடி என்று பதாகை ஏந்தி போராடினர். அதாவது,M.O.D.Iஎன்பது மர்டர்- ஆப்- டெமாக்ரடிக்- இந்தியாஎன பதாகை ஏந்திப் போராடுகிறார்கள். வெளிநாடுகளிலும் போராட்ட ஆதரவு பெருகிவருவதால், மத்தியமோடி அரசு, பெரும் அழுத்தத்தில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.