Skip to main content

வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் சிங்கப்பூர் அக்கறை கொண்டிருக்கிறது: உறுதி அளித்த பிரதமர் லீ சியன் லூங்

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

 

சிங்கப்பூரர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் சிங்கப்பூர் அக்கறை கொண்டிருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
 

இந்தக் கடினமான காலக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தத் தருணத்தில், வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம், நலன், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்வதற்கும் உறுதியளித்தார். 

 

 

 

Singapore PM Lee Hsien Loong


 

மேலும், ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்கும் வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்கும் முதலாளிகளுடன் கலந்துபேசி உரிய வசதிகள் செய்யப்படும். குடும்பத்தார் நண்பர்களுடன் ஊழியர்கள் தொடர்பில் இருக்க உதவி செய்யப்படும்.
 

வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் ரமதான் மாதத்தில், முஸ்லிம் ஊழியர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இம்மாதம் இந்திய ஊழியர்கள் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டதைப் போலவே, அடுத்த மாதம் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்துக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 
 

கட்டுமானத்துறை ஊழியர்கள் வேலைக்கு வரக்கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வேளையில் கப்பல் பட்டறை மற்றும் கட்டுமானத்துறை ஊழியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகின்றது. 
 

அவர்கள் தங்கும் விடுதிகளில் மருத்துவக்குழு, மனிதவள மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப் லைன் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.  
 

மேலும் குடுப்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் விடுதியில் தங்கி உள்ள ஊழியர்களுக்கு 5 0ஜீ.பி ப்ரிப்பெய்ட் சிம்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பின் அதற்கும் முதலாளிகள் உதவி புரிவார்கள். வேலை அனுமதி சீட்டு உடையவர்கள் அதற்கான தீர்வைத் தொகை ( Levy) கட்ட வேண்டிய அவசியமில்லை என தளர்த்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Next Story

சிங்கப்பூர் போல் தமிழகத்தின் துறைமுகங்களை மாற்றும் முயற்சி; சிங்கப்பூரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று துறைமுகங்கள் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.

 

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருகை தந்து இங்குள்ள துறைமுகங்கள் குறித்து பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தது. அதன் அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் சிங்கப்பூர் சென்றனர்.

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் அமைச்சரை வரவேற்றார். அதிகாரிகளுடன் சிங்கப்பூர் துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக பிரதிநிதி அனைத்தும் சுற்றிக்காண்பித்து அதுகுறித்த தகவல்களை அமைச்சரிடம் தெரிவித்தார். அதன்படி, பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில் சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம் துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

2023 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இறங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டங்களை கையாளும் திறன் கொண்டது என்று  அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

 

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையே அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டின் கடற்கரையில் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் துறைமுக பிரநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

அமைச்சர் சிங்கப்பூர் சென்றதும் திமுக அயலக அணியின் சிங்கப்பூர் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.