சர்வதேச அளவில் இவான்கா டிரம்ப், ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளிய நிர்மலா சீதாராமன்...

2019 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் என்ற பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

forbes list for worlds most powerful women 2019

இந்த பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில், இவான்கா டிரம்ப், இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆகியோரை விட முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் என்ற இந்த பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இரண்டாம் இடத்தையும், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் இந்த பட்டியலில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 29 ஆவது இடத்தையும், இந்திய பெண்களான, HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தையும், பயோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரண் மஜூம்தார் 65வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் க்ரெட்டா தன்பேர்க் நூறாவது இடத்தை பிடித்துள்ளார்.

forbes greta thunberg Nirmala Sitharaman rewind 2019
இதையும் படியுங்கள்
Subscribe