ADVERTISEMENT

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்! 

10:14 PM Nov 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான் 'மாரடோனா' மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர் மாரடோனா, உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர். அவருக்கு ஏற்கனவே 2005 -ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சிகிச்சையின் காரணமாக, வயிற்றுப் பகுதியில் புண் ஏற்பட்டு, உடலுக்கு உள்ளேயே சிறிதளவு ரத்தம் வெளியேறி, உடல் நலம் பாதிப்படைந்திருந்தது. அதேபோல், 2019 -ஆம் ஆண்டிலும் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இப்படிச் சிலமுறை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாரடோனா, இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'மாரடோனாவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT