பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அந்நாட்டின் வழியாக செல்ல அனுமதி கேட்டதற்கும் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது.

Advertisment

இந்நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்வதை கவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளாரகள். தீவிரவாதிகள் விமானத்தை தாக்க வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.