பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.
பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன்விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.