Advertisment

36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...

நிலப்பரப்பில் இருந்து 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisment

flight repair in america

ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 284 பேருடன் கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ‘ஏர் கனடா’ விமானம் ஒன்றுபுறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட 2 மணிநேரத்திற்கு பிறகு அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நடுவானில் விமானம் குலுங்க ஆரம்பித்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்ததால் பயணிகள் யாரும் சீட் பெல்ட் போடாத நிலையில், விமானத்தில் ஏற்பட்ட குலுக்களால் பயணிகள் மேற்கூரையிலும் இருக்கையிலும் பலமாக மோதிக்கொண்டனர்.இதில் 37 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

Advertisment

அதிர்ஷ்டவசமாக விமானி, விமானத்தை சரியாக கையாண்டு அவசரமாக அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் விமானியின் இந்த சாதுரியத்தால் 284 பேரின் உயிர்கள் காப்பற்றுள்ளப்பட்டுள்ளது.

Canada flight America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe