Advertisment

நடுவானில் தீ பிடித்த விமானம்... மிரண்ட பயணிகள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு காலை 11 மணியளவில் ஃபிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் 113 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதனுடைய என்ஜின்களில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Advertisment

இதனை அறிந்த விமானி, உடனடியாக மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார். இது குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடனே தீயணைப்பு தீயை அணைத்தனர். பின்பு விமானத்திலிருந்த 347 பயணிகளும் பத்திரமாக மீட்கபட்டனர். இச்சம்பவம் விமானப் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Flight crush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe