ஓடுபாதையில் விமானத்தின் டயரில் தீப்பிடித்த சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற விமானம் இன்று காலை வழக்கமாக மோண்டியலில் இருந்து பொகோட் நகருக்கு செல்ல வேண்டும். இதற்காக விமானம் காலையில் புறப்பட தயாரானது. ஆனால் ஓடுபாதையில் விமானம் செல்லும் போதே அதிலிருந்து தீப்பொறி கிளம்ப ஆரம்பித்துள்ளது. சில வினாடிகளில் விமானத்தின் சக்கரம் கழன்று தனியே சென்றுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் நிலை குலைந்த பயணிகள் அலற ஆரம்பித்துள்ளனர். இதனால் விமானி செய்வதறியாது திகைத்து நின்றார். பிறகு கடுமையான முயற்சிக்கு பிறகு, ஒரு வழியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிலை நிறுத்தினார். விமானத்தில் பயணம் செய்த 200 மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.