Skip to main content

157 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது...

Published on 10/03/2019 | Edited on 10/03/2019
ethiopia


 

157 பேருடன் சென்ற எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
 

எத்தியோப்பியா தலைநகர் அத்திஸ் அபாபாவிலிருந்து இருந்து நைரோபி சென்றபோது விபத்து.
 

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்ததாக தகவல்.  
 

விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாத பகுதி கண்டுபிடிப்பு...

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

உலகில் எந்தவிதமான உயிரினமும் வாழமுடியாத ஒரு பகுதியை ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.

 

This is one place on Earth where no life can exist

 

 

Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிகையில் அண்மையில் ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவில் உள்ள டல்லோல் என்ற பகுதியில் எந்தவித உயிரினங்களும் வாழ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் டல்லோலில் பல சோதனைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் எந்தவித உயிர்களோ அல்லது நுண்ணுயிரிகளோ கூட இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பூமியின் மிக தீவிரமான சூழல்களில் ஒன்றான டல்லோலில் நம்பமுடியாத அளவுக்கு வெப்பம், உப்பு மற்றும் அமிலத்தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சில எரிமலை பள்ளங்களிலிருந்து விஷவாயுக்கள் வெளியாவதாகவும், தீவிர நீர் வெப்ப செயல்பாடு அரங்கேறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

 

Next Story

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 684 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்த நிறுவனம்... ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தார்...

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் இந்த ஆண்டு தொடக்கம் என அடுத்தடுத்து போயிங் நிறுவனத்தின் இரு விமானங்கள் பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.

 

Boeing announces $100 million fund for families of 737 Max crash

 

 

கடந்த ஆண்டு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகள் உயிரிழந்தனர். அதே போல கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியா நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளில் சேர்த்து மொத்தம் 338 பேர் உயிரிழந்தனர்.  

இந்த விபத்துகளுக்கு பின்னர் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க உலக நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 684 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்குவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பீடை ஏற்க மறுத்துள்ளனர்.