அமெரிக்காவில் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியாட்டிலின் தேசிய நெடுஞ்சாலையில், வாஷிங்டன் மகாண காவல் அதிகாரி கிளிண்ட் தாம்ஸன் என்பவர், சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் ரோந்து சென்றபோது சிறிய ரக விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்ததைக் கண்டார். அலுவலக நேரம் என்பதால் அந்த சாலையில் நெரிசல் மிகுந்திருந்தது. சிறிய ரக விமானம் சாலையில் தரையிறங்கப்போவதை உணர்ந்த அந்த காவல் அதிகாரி, உடனடியாக, அவசர விளக்கை போட்டு, டிராஃபிக்கை நிறுத்தி, சிறிய ரக விமானம் தரையிறங்க உதவி புரிந்தார்.

Advertisment

aaa

ஒருவர் மட்டுமே பயணிக்ககூடிய கே.ஆர் 2 ரக அந்த விமானம், வாகனங்கள் சென்று கொண்டிருந்த நெரிசல் மிகுந்த சாலையில் தரையிறங்கியது. இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். விமானத்தை ஓட்டிவந்த வந்த டேவிட் பெக்காம் என்ற விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், விமானத்தின் எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், அதனை அவசர அவசரமாக விமானி தரையிறக்கியது தெரிய வந்துள்ளது.