டெல்லி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ தனியார் நிறுவன விமானம் ஒன்று கத்தார் நாட்டின் தோஹாவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோதுநைஜீரியாவைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தவிமானி, கராச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையைத்தொடர்பு கொண்டு அனுமதி கேட்டுள்ளார்.
இதனையடுத்து கராச்சியில் விமானத்தைத்தரையிறக்க அனுமதி கிடைத்ததையடுத்துவிமானம் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பயணியைப் பரிசோதித்ததில்அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் 5 மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் நடைமுறைகள் அனைத்தும் முடிந்தபின் மீண்டும் டெல்லிக்கு வந்தடைந்தது.