Advertisment

ஐந்தாண்டு விண்வெளி பயணம்... மனிதகுல ரகசியத்தைச் சுமந்து வரும் ஹயாபுசா-2!!

 Five year space journey ... Hayabusa-2 carrying the secret of humanity !!

மனித குலத்தின் தேடல் பூமியிலிருந்து விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதகுலத்தின் முக்கியத் தேடலுக்கான விடைகளைவிண்கலம் ஒன்று, ஒரு வருடமாகச் சுமந்து, பூமியைநோக்கி வந்துகொண்டிருக்கிறதுஎன்றால் சற்று திகைத்துத்தான் ஆகவேண்டும்.

Advertisment

பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோ மீட்டர்தூரத்திலுள்ள மிகச்சிறியகோள்ஒன்றுக்கு அனுப்பப்பட்ட விண்கலம், அடுத்த வாரம் பூமியை வந்துசேர இருக்கிறது. ஜப்பானிய விஞ்ஞானிகளால், தயாரிக்கப்பட்டஹயாபுசா-2 என்ற விண்கலம் அடுத்த மாதம் 6-ஆம்தேதி, தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில்தரையிறங்கஉள்ளது. மிகச் சரியாக, 2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 3 -ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹயாபுசா-2விண்கலம், நான்கு ஆண்டுகள் பயணித்து,கடந்த 2018 -ஆம் ஆண்டு, 'ரியக்கு' என்ற சிறிய கோளில் தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்ட ஹயாபுசா-2 தேவையான தனது ஆராய்ச்சி பணிகளை முடித்துக் கொண்டு, கடந்தஆண்டு டிசம்பர் மாதமே பூமிக்குப் புறப்பட்டுவிட்டது.

Advertisment

 Five year space journey ... Hayabusa-2 carrying the secret of humanity !!

தற்போது இந்த விண்கலமானது பூமியை மிகவும் நெருங்கிவிட்டது. ஹயாபுசா-2 சுமந்துவரும் மண் மாதிரிகளைஆராய்வதன் மூலம், சூரிய மண்டலத்தினுடைய தோற்றம், உயிரினங்களின்தோற்றம் குறித்த விடைதெறியாத பல்வேறு ரகசியக் கேள்விகளுக்குப் பதில் தெரியவரும் என மகிழ்ச்சியில் உள்ளனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். இருப்பினும் சற்றுசவாலும்தலைநீட்டத்தான் செய்கிறது.சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியை, விண்கலத்தில் இருந்துபத்திரமாகத் தரை இறங்குவது தான் அதன்பயணத்தில் மிகப்பெரியசவாலான ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை வந்தடைந்தவுடன் ஹயாபுசா-2 எந்த இடத்தில் தரையிறங்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ள ரேடார்உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள்மேற்கு ஆஸ்திரேலியபகுதிகளில் பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற கோள்களைவிட,சிறிய கோள்கள் சூரிய மண்டலத்தில் மிகவும் பழமையானதாகும். எனவே, அதிலிருந்து சேகரிக்கப்படும் மண் மாதிரிகள், மனிதனின் அறிவியல் ஆராய்ச்சியில் பல கேள்விகளுக்கானபதில்களைபொதிந்துள்ளதாகவே இருக்கும்என்கிறது விஞ்ஞானஉலகம்.

பூமியிலிருந்து அந்தச் சிறியகோளுக்குச் சென்று, ஆராயநான்காண்டு, பூமிக்குத் திரும்ப ஓராண்டு எனமொத்தம் ஐந்தாண்டுகளை விண்வெளியிலேயே கழித்த 'ஹயாபுசா-2' மனிததேடலின்கேள்விகளுக்கானவிடைகளைப் பூர்த்தி செய்யுமாஎன்பதை8 நாட்கள் பொறுத்திருந்துபார்ப்போம்.

Space Japan satelite maps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe