Advertisment

அணு ஆயுத பயன்பாடு இதற்காக மட்டுமே இருக்கும் : கூட்டாக உறுதியளித்த வல்லரசுகள்!

NUCLEAR WEAPONS

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களானசீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும்இணைந்து அணு ஆயுதப் போரைத் தடுப்பது மற்றும் அணு ஆயுதப் போட்டியை தவிர்ப்பது தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

Advertisment

சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை பெருக்கி வருவது அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த ஐந்து நாடுகள் கூட்டாக அணு ஆயுதங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஐந்து நாடுகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரைத் தவிர்ப்பது மற்றும் மூலோபாய அபாயங்களைக் குறைப்பதை தங்கள் முதன்மை பொறுப்புகளாக கருதுகின்றன.

Advertisment

அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அணு ஆயுத பயன்பாடு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அணு ஆயுதங்கள் இருக்கும் வரை, அவை தற்காப்பு நோக்கங்களுக்காகவும், போரைத் தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம்.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த வாக்குறுதிகளில் (NPT) நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணு ஆயுதங்களின் அங்கீகரிக்கப்படாத அல்லது திட்டமிடப்படாத பயன்பாட்டைத் தடுப்பதற்கான எங்களது நடவடிக்கைகளைத்தொடர்ந்து மேற்கொள்ளவும், அதனைமேலும் வலுப்படுத்தவும் நாங்கள் ஒவ்வொருவரும் உத்தேசித்துள்ளோம். இவ்வாறு ஐந்து நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Russia china America nuclear
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe