Advertisment

அரிய வகை மீன்; ஒரே இரவில் கோடீஸ்வரரான மீனவர்

Advertisment

Fisherman became a millionaire overnight after catching sowa golden fish in Pakistan

மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை மீன் சிக்கியதால் ஒரே இரவில் கோடீசுவரரான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisment

பாகிஸ்தான் கராச்சியில்உள்ள இப்ராஹிம் ஹைதரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச் என்பவர் கடந்த திங்கட்கிழமை அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது தங்க மீன்கள் என்று அழைக்கப்படும் சோவா மீன்கள் ஹாஜி பலோச் வலையில் சிக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மீனவர் ஹாஜி பலோச் கரைக்குத் திரும்பிய உடனே கராச்சியில் உள்ள துறைமுகத்தில் அரிய வகை மீனான சோவா மீனை ஏலம் விட்டுள்ளார். அதில் சோவா மீன்கள் 7 கோடி ரூபாய் வரை ஏலம் போனதால் ஹாஜி பலோச் ஒரே இரவில் கோடீசுவரராக மாறியுள்ளார். இந்தப் பணத்தைத்தன்னுடன் கடலுக்கு வந்த 7 மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை சோவா மீன் மிகவும் அரிதானதாகவும், அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் மருத்துவ குணாதிசயங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.

fish fisherman Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe