இந்தோனேஷியாவில் மீன் பிடிக்க சென்ற இளைஞரின் கழுத்தில் மீன் ஒன்று மோதி கழுத்தின் மறுமுனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனிஷியாவை சேர்ந்த சிறுவன் முகமது இதுல். இவர் பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தனது அப்பாவுடன் கடலுக்கு மீன் படிக்க செல்வார். சிறுவயது முதலே அவர் மீன்பிடிக்க ஆர்வமாக இருப்பார்.
இந்நிலையில், நேற்று மீன் பிடிப்பதற்காக தனது தந்தையுடன் கடலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மீன் ஒன்று சிறுவனின் கழுத்தில் பாய்ந்து மறுமுனைக்கு வந்துள்ளது. சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த மீன் மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மீன் வெட்டி எடுக்கப்பட்டது. சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow Us