Skip to main content

60 கிமீ வேகத்தில் மோதி கழுத்தை துளைத்த மீன்... இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெட்டி எடுப்பு!

Published on 22/01/2020 | Edited on 23/01/2020

இந்தோனேஷியாவில் மீன் பிடிக்க சென்ற இளைஞரின் கழுத்தில் மீன் ஒன்று மோதி கழுத்தின் மறுமுனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தோனிஷியாவை சேர்ந்த சிறுவன் முகமது இதுல். இவர் பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தனது அப்பாவுடன் கடலுக்கு மீன் படிக்க செல்வார். சிறுவயது முதலே அவர் மீன்பிடிக்க ஆர்வமாக இருப்பார்.



இந்நிலையில், நேற்று மீன் பிடிப்பதற்காக தனது தந்தையுடன் கடலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மீன் ஒன்று சிறுவனின் கழுத்தில் பாய்ந்து மறுமுனைக்கு வந்துள்ளது. சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த மீன் மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மீன் வெட்டி எடுக்கப்பட்டது. சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு வாரம்தான் டைம்; 134 இறால் பண்ணைகளுக்கு செக்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Check for 134 shrimp farms; The court gave 6 weeks time

சட்ட விரோதமாகச் செயல்படும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக அரசு மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இறால் பண்ணைகள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அமைத்துள்ள இறால் பண்ணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,709 பண்ணைகளில் 2,227 இறால் பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின்  விண்ணப்பங்கள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 134 இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்ட விரோதமாகத் தமிழகம் முழுவதும் இயங்கும்  இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். அவ்வாறு மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story

அரிய வகை மீன்; ஒரே இரவில் கோடீஸ்வரரான மீனவர்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Fisherman became a millionaire overnight after catching sowa golden fish in Pakistan

 

மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை மீன் சிக்கியதால் ஒரே இரவில் கோடீசுவரரான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச் என்பவர் கடந்த திங்கட்கிழமை அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது  தங்க மீன்கள் என்று அழைக்கப்படும் சோவா மீன்கள் ஹாஜி பலோச் வலையில் சிக்கியுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து மீனவர் ஹாஜி பலோச் கரைக்குத் திரும்பிய உடனே கராச்சியில் உள்ள துறைமுகத்தில் அரிய வகை மீனான சோவா மீனை ஏலம் விட்டுள்ளார். அதில் சோவா மீன்கள் 7 கோடி ரூபாய் வரை ஏலம் போனதால் ஹாஜி பலோச் ஒரே இரவில் கோடீசுவரராக மாறியுள்ளார். இந்தப் பணத்தைத் தன்னுடன் கடலுக்கு வந்த 7 மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை சோவா மீன் மிகவும் அரிதானதாகவும், அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் மருத்துவ குணாதிசயங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.