Skip to main content

சலூனில் முடிவெட்டிட்டு தலைக்கு மஸாஜ் செய்வது உயிருக்கே ஆபத்தாம்!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

இன்றைக்கு மாடர்ன் சலூன்களில் தங்களிடம் முடிவெட்டிக் கொண்டால், இலவசமாக தலைக்கு மசாஜும், கழுத்துக்கு மசாஜும் செய்துவிடப்படும்னு கஸ்டமர்களை ஈர்க்கிறார்கள். இதில் ஈர்க்கப்பட்டு போன ஒருத்தர் சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவுசெய்து நொந்துபோயிருக்கிறார். ஆம், சலூன்காரர் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, கழுத்தை படக்கென்று திருப்பு சொடக்கு போட்டிருக்கிறார். அப்போதைக்கு சுகமாகத்தான் இருந்திருக்கிறது.

FIRST HAIR CUT AFTER  Massage on the head in the saloon is a risk!

 

ஆனால் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவருக்கு கண் பார்வை குறைந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தபோது பேசுவதிலும் நாக்கு குழறியிருக்கிறது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கே போனதும்தான் அவருக்கு பக்கவாதநோய் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. கழுத்தை சடாரென்று திருப்புவதால் மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதாக விக்ரம் ஹுடெட் என்ற நரம்பியல் நிபுணர் கூறியிருக்கிறார். இவருடைய கருத்து குறித்து மேலும் ஆய்வுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

சலூன் கடையில் காவலர் அடாவடி; அதிரடி நடவடிக்கையில் எஸ்.பி

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

nn

 

தன் மகனுக்கு சரியாக முடி வெட்டாததால் அடாவடியாக அத்துமீறி மற்றொருவரின் சலூன் கடைக்கு பூட்டு போட்டு பொது இடத்தில் அதகளம் செய்த போலீஸ்காரர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. சரவணன்.

 

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ. இவரின் மகன் நகரிலுள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்ததும், அவருக்கு சரியாக முடித்திருத்தம் செய்யவில்லை எனக் கூறி, காவலர் நேவிஸ் பிரிட்டோவும் அவரது மனைவியும் மகனிடம் சலூன் கடை பற்றி சரிவர விசாரிக்காமல் மாறுதலாக தனியார் பள்ளியின் எதிரே உள்ள மற்றொரு சலூன் கடைக்குச் சென்றுள்ளனர். அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாததால் அவரின் நம்பரில் தொடர்பு கொண்ட காவலர்  அவரை திட்டியதுடன் கடைக்கு வரவழைத்துள்ளார்.

 

அத்துடன் தன்னிடமிருந்த பெரிய பூட்டைக் கொண்டு கடையைப் பூட்ட முயன்றுள்ளார். அதைக்கண்டு பதறிய பக்கத்து கடைக்காரர், “அவர் சாப்பிடச் சென்றுள்ளார். இப்போ வந்துடுவார். கடையைப் பூட்டாதீங்க” என்றவரிடம் அநாகரீகமாக பேசிய காவலர் கடையைப் பூட்டியுள்ளார். சில நொடிகளில் கடையின் உரிமையாளரான யுவசிவராமன் வந்தவுடன் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோ அங்கிருந்து சென்றிருக்கிறார். அது சமயம் யுவசிவராமன் போலீஸ்காரர் மகனிடம், “நான் உனக்கு முடி வெட்டினேனா” என்று கேட்டதற்கு, “இல்லை” என்று பதிலளித்துள்ளான். அதன் பிறகே போலீஸ்காரர் தவறான கடைக்கு வந்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.

 

நடு பஜாரில் கடை ஒன்றை காவலர் அடாவடியாகப் பூட்டிய சம்பவம் நகர வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்த, காவலர் நடந்த கொண்டது, அவரின் அத்துமீறல் பேச்சுக்கள் தொடர்பான வீடியோ வைரலாக, இதனையறிந்த மாவட்ட எஸ்.பி.யான சரவணன் அதிரடி நடவடிக்கையாக போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 


 

Next Story

‘புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது’ - கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

Published on 07/11/2022 | Edited on 07/11/2022
'Even the hair on the eyebrow has fallen out'

 

தலைமுடி கொட்டும் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வந்த இளைஞர் அதற்கான மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் பயனளிக்காததால் தன்னுடைய இந்த நிலைக்கு மருத்துவரே காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தலைமுடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதற்காகக் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ரஃபிக் என்ற மருத்துவரிடம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார் பிரசாந்த். தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் முடி கொட்டுவது நிற்கவில்லை. இதனால்  வேதனையடைந்த பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்து, 'மருத்துவர் ரஃபிக் கொடுத்த மருந்துகளால் என்னுடைய புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது. தன்னைப் பார்ப்பவர்கள் கேலி செய்கின்றனர்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.