joe biden

Advertisment

அமெரிக்க அதிபராகபதவியேற்றஜோபைடன், முதல் நாளில்15 நிர்வாக ஆணைகளில் அதிரடியாக கையெழுத்திட்டார். இதன்மூலம்அமெரிக்கஅதிபர்களிலேயே முதல் நாள் அதிக கையெழுத்துகளையிட்ட அதிபர் என்ற பெருமையையும் ஜோபைடன்பெற்றுள்ளார்.

ஜோபைடன்முதல் நாள் போட்டகையெழுத்துகளில் முக்கியமானவையாக கருதப்படுவது, முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முடிவுகளை மாற்றியமைத்த உத்தரவுகள் ஆகும்.

சுற்றுசூழலைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பாரிஸ்பருவகாலஒப்பந்தத்தில் இருந்து, ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவெளியேறியது. தற்போது பைடன்தலைமையிலான அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையவுள்ளது. இதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.மெக்சிகோ- அமெரிக்கா இடையே தடுப்பு சுவர்கட்டுவதில் ட்ரம்ப்மிக உறுதியாக இருந்தார். சுவர்கட்டுவதற்கு நிதி அளிக்கும் விதமாக அவசரகாலஉத்தரவையும் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்துசெய்துள்ளார் ஜோபைடன்.

Advertisment

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியாஉள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் பயணத் தடைவிதித்திருந்தார். அதனைபைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் கரோனாதொற்று தீவிரமாக பரவிய நேரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவைப் பாதுகாக்கிறது, அதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பு கரோனா வைரஸ் குறித்த துல்லியமான தகவல்களைவழங்கவில்லைஎன கூறி அதிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்கான நடைமுறைகளையும் ட்ரம்ப்அரசு தொடங்கியது. இந்த நடைமுறைகளை நிறுத்திவைக்கவும் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.