Skip to main content

உலகிலேயே முதன்முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

The first country in the world to celebrate New Year

 

உலகம் முழுவதும் மக்கள் 2022 ஆம் ஆண்டைக் கடந்து 2023 ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

 

அனைத்து மக்களும் பாரபட்சமின்றி அடுத்த ஆண்டிற்கான துவக்கத்திற்கு கவுண்டவுனை எண்ணத் துவங்கியுள்ளனர். மக்கள் ஆவலுடன் கொண்டாடும் அதே சமயத்தில் அரசு சார்பில் கட்டுப்பாடுகளும் கொண்டாட்டத்திற்கான நெறிமுறைகளும் விதிக்கப்படும். 

 

நள்ளிரவில் வாணவேடிக்கைகளும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதும் வெடிவெடித்துக் கொண்டாடுவதும் என அரசு எத்தனை கட்டுப்பாடுகளைப் போட்டாலும் அதைத் தடுக்க முடியாது.

 

இந்நிலையில் உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து 2023 ஆம் ஆண்டை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் ஆக்லாந்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆக்லாந்து ஸ்கை டவரில் வண்ணமயமான வெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

 

இந்நாட்டை தொடர்ந்து ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்"- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

"People must cooperate to prevent crime" - District Superintendent of Police request!

 

திண்டுக்கல்லில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், "திண்டுக்கல்லில் 2021- ஆம் ஆண்டு 46 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ரவுடிகள், பல குற்றங்களில் தொடர்புடைய 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நன்னடத்தை விதியை மீறிய 20 பேரின் பிணை ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மது அருந்தி வாகனம் ஓட்டிய 732 பேர், ஹெல்மெட் அணியாமல் ஓட்டிய 4 லட்சத்து 61 ஆயிரத்து 128 பேர், சாலை விதிகளை மீறியதாக எட்டு லட்சத்தி 99 ஆயிரத்து எழுபத்தி எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

வாகன வழக்குகளில் 6.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பைத் தடுக்க ஓட்டுபவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 226 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 294 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்த குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக 807 வழக்குகளில் 833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடம் 8 கோடிக்கு 8732 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1263 மது விலக்கு, 208 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 298 பேரில் 274 பேரை உரியவருடன் சேர்த்துள்ளோம். 194 மணல் திருட்டு வழக்குகளில் 284 பேர் கைதாகியுள்ளனர். இனிவரும் நாட்களில் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கூறினார். 

 

 

Next Story

புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும்! (படங்கள்) 

Published on 01/01/2022 | Edited on 01/01/2022


புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இளைஞர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரமாண்ட சிவன் சிலையும், தலைமைப் புலவர் நக்கீரருக்கு சிலையும் கொண்ட கீரமங்கலம் ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்களால் அன்னதானம் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தைச் சுற்றி வந்தனர். மேலும் குழந்தைகள் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். 

 

அதேபோல் செரியலூர் கிராமத்தில் உள்ள செரியலூர்-கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து இளைஞர்களால் அன்னதானம் வழங்கினார்கள். இதே போல மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தது.