பிரேசிலின் அமேசான் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான காட்டுத் தீயினால் மிக மோசமான அழிவை சந்தித்து வருகின்றது.

Advertisment

fire fighters send to amazon forest

இந்த சம்பவம் உலக அளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேசில் அரசு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக பேசப்பட்டது.

Advertisment

இதனிடையே, அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை விரைந்து கட்டுப்படுத்த வலியுறுத்தி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போராட்டம் நடைபெற்றது. பசுமை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அமேசான் காட்டில் பரவி வரும் பயங்கர தீயை கட்டுப்படுத்த 44 ஆயிரம் வீரர்களை அந்நாட்டு அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது.