தீபாவளிக்கு வெடி வெடித்தவருக்கு நீதிமன்றம் 15 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான சீனிவாசன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தீபாவளி பண்டிகையின் போது வீட்டின்முன் பட்டாசு வெடித்துள்ளார். சிங்கப்பூரில் பட்டாசு வெடிப்பது சட்டத்திற்கு புறம்பானது.

Advertisment

இதனால், அவர் மீது சிங்கப்பூர் போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், சீனிவாசனுக்கு 30 ஆயிரம்சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 15 லட்சம் ஆகும். வெடி வெடித்தவருக்கு 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment