பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள பிரதமர் இம்ரான் கானின் பிரதமர் செயலகத்தின் ஆறாவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட போது இம்ரான் கான் அந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்ததாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவியதை அடுத்து அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார் எனவும், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.