எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சூடான் நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

fire accident in sudan costs 23 lives

சூடான் நாட்டின் கார்டம் நகரில் டைல்ஸ்தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீ பிடித்தது. இதில் இந்திய தொழிலாளர்கள் உட்பட 23 பேர் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.