gfhghfhgfhg

Advertisment

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சாவ்க்பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் பழமையான இடங்களில் ஒன்றான சாவ்க்பஜார் பல கடைகள் மற்றும் குடியிருப்புகளை கொண்டது. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வைப்பது ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.