Advertisment

“முச்சந்தியில் உடலை மூன்று நாட்கள் தொங்கவிட வேண்டும்”- வெளியான முஷரப்பின் தீர்ப்பு விவரம்

கடந்த 2001 முதல் 2008வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷரப்.

Advertisment

musharaf

அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரஃப்-க்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்.

Advertisment

தேசத்துரோக வழக்கில் முஷரப்புக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக 2013ஆம் ஆண்டு முஷரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில்தான் முஷ்ரபிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் உடல்நலக் குறைவால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தண்டனை குறித்த செய்தி வெளியான பின்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளவர். அதில் தன் மீது சுமத்தப்படும் தேசத்துரோகம் என்பது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது இதுவே முதன்முறையாகும். அது தொடர்பான 167 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் முஷாரப் ஒருவேளை தூக்கிலிடப்படுவதற்கு முன் உயிரிழந்தால் உடலை தரதரவென தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள டி-சவுக் பகுதிக்கு இழுத்துச் செல்லவேண்டுமென்றும், அங்கு முச்சந்தியில் உடலை மூன்று நாள் தொங்கவிடவேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

musharaf Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe