Advertisment

"நம்பிக்கையிழந்த கோழையின் கடைசி செயல்" - ஐஎஸ் ஐஎஸ் தலைவனின் மரணத்தை வர்ணித்த ஜோ பைடன்!

is is chief

உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கங்களில் ஐஎஸ் ஐஎஸ்இயக்கத்தின் தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, அமெரிக்க படைகளிடம் சிக்காமல் இருக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

துருக்கி எல்லையில் உள்ள சிரியாவின்அட்மேயின் நகரில், ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மடியில் வசித்து வந்த அவரை, அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததை தொடர்ந்து வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளார். இதில்அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, அவரது மனைவி, அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

Advertisment

கடந்த டிசம்பர் மாதம்அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி, குறிப்பிட்ட அந்த கட்டிடத்தில் வசித்து வந்ததைஅமெரிக்கா கண்டுபிடித்ததாகவும், அதனைத்தொடர்ந்து அவரைபிடிக்க திட்டம் திட்டப்பட்டதாகவும்தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், கடந்த செவ்வாய் கிழமை அன்று திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதி ஒப்புதலை அளித்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும்இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதைவெள்ளை மாளிகையில் இருந்து கண்காணித்து வந்துள்ளனர்.அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி தற்கொலை செய்துகொண்டதைஜோ பைடன், நம்பிக்கையிழந்த கோழையின் கடைசி செயல் என வர்ணித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிறுவனர்அபு பக்கர் அல்-பாக்தாதியும்அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தபோது, வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

isis
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe