பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் பிஜி தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆந் தேதி பிஜி தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவாகியது குறிப்பிடத்தக்கது.