ரத்தக்களறியான உணவகம்... அசால்ட்டாக சிப்ஸ் சாப்பிட்ட இளைஞர்! (வீடியோ)

உணவகத்தில் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடைபெற்ற சண்டை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இங்கிலாந்தில் உள்ள பிரபலமான உணவகம் கெம்ப் கபே. இந்த உணவகத்துக்கு என்றே ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புசிற்றுண்டி சாப்பிட வந்த ஒருவருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்தின் போது கடையில் இருந்தவர்கள் அவர்களை விலக்க முயற்சி செய்த நிலையில், அங்கு இருந்த ஒருவர் இந்த சண்டை காட்சிகளை சினிமா பார்ப்பது போல பார்த்துக்கொண்டு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

attack
இதையும் படியுங்கள்
Subscribe