ADVERTISEMENT

"இந்த கரோனா தடுப்பூசியால் நரம்பியல் பாதிப்பு ஏற்படலாம்" - அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை!

03:22 PM Jul 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகமெங்கிலும் கரோனாவிற்கெதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியும் அடங்கும். இந்தநிலையில், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியால் குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் கோளாறு ஏற்படலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 12.8 மில்லியன் பேருக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 100 பேருக்கு குய்லின்-பார் சிண்ட்ரோம் கண்டறியப்பட்டதையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குய்லின்-பார் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு ஆகும். இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, அதன் புற நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியையோ அல்லது மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே அமைந்துள்ள நரம்புகளின் வலையமைப்பையோ தவறாக தாக்கும்.

குய்லின்-பார் சிண்ட்ரோம் கண்டறியப்பட்ட 100 பேர்களில் 95 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தற்போதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், குய்லின்-பார் சிண்ட்ரோமிற்கு ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என சுட்டுவதாகவும், தடுப்பூசியினால்தான் குய்லின்-பார் சிண்ட்ரோம் ஏற்பட்டது என கூறுவதற்கு போதுமான தரவுகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்த நரம்பியல் கோளாறு குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்துள்ளது

.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT