கிருஸ்துமஸ் பண்டிகையின் போது மகளுக்கு தந்தை வாழைப்பழத்தை பரிசாக கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கிருஸ்துமஸ் பண்டிகைக்காக தனது மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த தந்தை ஒருவர், வாழைப்பழத்தை கவரில் வைத்து கொடுத்துள்ளார். குழந்தையை ஏமாற்றும் வகையில் விளையாட்டாக இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

ஆனால், கவரை பிரித்து பார்த்த அந்த குழந்தை தந்தையை போல் தானும் அவரை ஏமாற்றாமல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளது. மேலும் அருகில் இருந்த தனது அம்மாவிடமும் அதை பகிர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை இணையத்தில் நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகிரார்கள். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட குழந்தையின் தந்தை கூறும்போது " என் குழந்தைக்கு ஒரு மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்து ஏமாற்ற நினைத்தேன். ஆனால் குழந்தையின் இந்த மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.