பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை வரும் அக்டோபருக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தாவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்போம் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரித்துள்ளது.

Advertisment

fatf issues last warning to pakistan

பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை வளர்க்கும் விதமாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு உறுதுணையாக உள்ளது என சர்வதேச நாடுகளிடம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவந்தன. இந்த நிலையில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மற்றும் மே என இரண்டு முறை பாகிஸ்தான் இந்த இலக்கை தவறிவிட்ட நிலையில் இறுதியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.