Advertisment

தீயில் எரிந்த வயலை தனி ஒருவனாக அணைத்த விவசாயி!

உலகில் விநோத செயல்களுக்கு எங்போதும் பஞ்சமிருக்காது. அதுவும் இந்த கணிணி யுகத்தில் எதை வித்தியாசமாக செய்தாலும் அது அனைவராலும் கவனிக்கப்படும். அந்த வகையில் தன்னுடைய நிலத்தில் பரவிய தீயை விவசாயி ஒருவராய் சாதுரியமாக அணைத்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மிகவும் பரந்துவிரிந்த ஒரு நிலப்பரப்பில் ஒரு மூலையில் இருந்து மற்றொரு பகுதிக்கு தீ வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் நிலம் முழுவதும் தீ பரவி அனைத்து பயிர்களும் சேதமடையும் என்ற நிலையில், நிலத்தின் உரிமையாளர் சமயோஜிதமாக யோசித்து தீ பரவும் திசையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நிலத்தை உழுதார்.

Advertisment

இதனால் தீ ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்ல இயலாமல் கொழுந்துவிட்டு எரிந்த தீ அணைந்தது. இதை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

fire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe