/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/angeli4n434.jpg)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா அங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளவும் அங்கு சென்றுள்ளதாக சர்வதேச மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2005- ஆம் ஆண்டு, 2010- ஆம் ஆண்டுகளில் நிலநடுக்கம் வெள்ளப்பாதிப்பினை அறிந்துகொள்ள ஏஞ்சலினா ஜோலி சென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)