ADVERTISEMENT

200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த பிரபல கார் நிறுவனம்! 

11:04 AM Jun 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெஸ்லா நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக, 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம், மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும், கார் தயாரிப்பு பிரிவில் ஒரு அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சான் மாட்டியோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் கிளை அலுவலகம் மூடப்பட்டு, அதில் பணிபுரிந்த சுமார் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த மூன்று மாதங்களில் தனது நிறுவனத்தில் 10% ஆட்குறைப்பு செய்யப்போவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT