Advertisment

காதுவலியால் துடித்த இளைஞர்... பரிசோதனையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...

காது வலியால் துடித்த ஒரு இளைஞருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், அவரது காதுக்குள் 10 க்கும் மேற்பட்ட கரப்பான்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டடுள்ளது.

Advertisment

family of cockroaches found in a chinese mans ear

சீனாவின் குவான்டாங் மாநிலம், ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் லிவ், காதுக்குள் ஏதோ ஊர்வது போன்றும், சுரண்டுவது போன்றும் உணர்ந்துள்ளார். மேலும் காதில் திடீரென கடுமையான வலிஏற்பட்டுள்ளது. வலி தாங்கமுடியாமல் அருகில் உள்ள சான்ஹே மருத்துவமனையில் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரிடம் லிவ் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை சோதித்து பார்த்ததில், ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10க்கும் மேற்பட்ட குட்டிகளும் காதிற்குள் வசித்துவருவதைக் கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு சிறிய வகை கருவிகளை கொண்டு சிறிய கரப்பான்பூச்சிகளை ஒவ்வொன்றாக மருத்துவர் வெளியே எடுத்துள்ளார். ஆனால் பெரிய கரப்பான் பூச்சியை அகற்றமுடியாமல் சிரமப்பட்ட நிலையில், காதிற்குள் ஒரு மருந்தை செலுத்தி, நீண்ட போராட்டத்துக்குப்பின் அதனை வெளியே எடுத்துள்ளார்.ஏற்கனவே இதேபோல அமெரிக்காவின் ஒரு பெண்ணின் காதிற்குள் 9 நாட்கள் வாழ்ந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெளியே எடுத்து குறிப்பிடத்தக்கது.

weird china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe