கரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...

கரோனா தொற்று ஏற்படுவதற்கு 5-ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்று பரவிய வதந்தியால் இங்கிலாந்தில் 20-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

fake news costs 20 5g towers in england

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தொற்று ஏற்படுவதற்கு 5-ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என இங்கிலாந்து பிரபலம் ஒருவர் தெரிவித்தார்.இதையடுத்து அவர் கூறியதற்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.மேலும் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு யூ-ட்யூபிலும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகின.

5-ஜி டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி,அதன்பின் காற்றில் வேறுசில வாயுக்களை வெளியிடும்.இந்த வாயுக்கள் மூலம்தான் கரோனா வைரஸ் பரவும்.இதனை ஒருசில உலக நாடுகள் திட்டமிட்டுபரப்பி வருகின்றன' எனச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.இதன் காரணமாக இங்கிலாந்து முழுவதும் 5-ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு எதிராகக் கருத்துகள் எழுந்தன.

http://onelink.to/nknapp

இதன் உச்சகட்டமாக அந்நாட்டில் 5-ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் நான்கு நிறுவனங்களின் 20 செல்போன் டவர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.இது அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தின் நான்கு முன்னணி மொபைல் ஆபரேட்டர்கள் 5-ஜி கோபுரங்களை எரிப்பதைத் தடுக்க உதவி கேட்டு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.மேலும்,கரோனாவுடன் 5-ஜி நெட்வொர்க்கை தொடர்புப்படுத்துவதற்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus weird
இதையும் படியுங்கள்
Subscribe