Advertisment

ஆளும்கட்சியின் தற்புகழ்ச்சிக்காக போலி ஃபேஸ்புக் கணக்குகள்; முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

sv

வங்கதேசத்தில் மத்திய அரசானது தனது திட்டங்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பவும், பிரச்சாரத்திற்காகவும் உருவாக்கியிருந்த போலி ஃபேஸ்புக் கணக்குகளை அந்த நிறுவனம் முடங்கியுள்ளது. இந்த கணக்குகளைஆளும் கட்சி தன் திட்டங்களை பற்றி மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையும், ஆளுங்கட்சி மீது போலி குற்றச்சாட்டுகளையும் சுமத்த பயன்படுத்திவந்துள்ளது. வங்கதேசத்தில் வரும் 30 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கப்போவதை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள இந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் சைபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், 'நடுநிலையான செய்தி பக்கங்கள் போல தோற்றுவிக்கப்பட்ட இந்த பக்கங்கள், எப்பொழுதும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளது. இதனை கொண்ட ஆராய்ந்த பொழுதே அது போலி கணக்குகள் என தெரிய வந்தது, எனவே அப்படிப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என கூறினார்.

Advertisment

Bangladesh Facebook
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe