Advertisment

ட்விட்டரில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கும் வசதி நிறுத்திவைப்பு

The facility to buy blue ticks on Twitter has been suspended

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க்உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக்கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்தார். ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எனப்படும் நீல வண்ண டிக் குறியீடு பயன்படுத்த மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து ஏராளமான கணக்குகள் கட்டணம் செலுத்தி நீல வண்ணக் குறியீடுகளைப் பெற்றனர். அதே சமயத்தில் ஏராளமான போலிக் கணக்குகளும் 8 டாலர் கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் குறியீட்டினை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டு நீல வண்ணக் குறியீடு வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளம் காண ட்விட்டரில் நீல வண்ணக் குறியீடு இருந்து வந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் நீல வண்ண டிக் வேண்டுமெனில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்தது. பிரபலங்கள் ஒரு புறம் கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் வாங்கினால் அவர்கள் பெயரில் செயல்படும் போலிக் கணக்குகளும் நீல வண்ண டிக்கிற்கான கட்டணம் செலுத்தி டிக் பெற்றுள்ளனர். இதனால் பிரபலங்களின் பெயர்களில்பல போலிக் கணக்குகள் உருவானது குழப்பத்தை ஏற்படுத்தியது.

போலிக் கணக்குகள் அதிகமானதைத்தொடர்ந்து நீல வண்ண டிக் கொடுக்கும் வசதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

elonmusk twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe