Advertisment

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் ஏன்...? காரணம் இதுதான்!!

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகள் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகஏற்பட்ட தடை சுமார் 12 மணி நேர முயற்சிக்குப் பிறகு சரி செய்யப்பட்டது.

Advertisment

உலகம் முழுவதும் புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ் களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என பல்லாயிரக்கணக்கானபுகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சனை பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்அதிகம் இருந்ததாகஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 Facebook, WatsApp, Instagram Sudden Freeze .. This is the reason !!

இந்த பிரச்சனையை சரிசெய்து இயல்பு நிலைக்கு திரும்ப முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த மார்ச் மாதத்திலும் இதுபோன்ற ஒரு பிரச்சனை ஃபேஸ்புக்சந்தித்ததும், இதனால்24 மணி நேரத்திற்கு ஃபேஸ்புக் சேவைகள் முடக்கப்பட்டதும்குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்மத்திய அரசு வாட்சப்,இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது எனவும்இதனால் இனிஇரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை சமூக வலைதளங்கள் வேலை செய்யாது எனவும், மலேசியாவின் வாட்சப்கணக்குகளை சைனாவைசேர்ந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஹேக் செய்துள்ளதாகவும் வதந்திகளும் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

instagram Facebook watsapp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe